⚠️ This petition has ended. You can support and sign the following petitions:

◻️ Justice For Phakama
◻️ Support the Scarborough Subway Extension
◻️ Hunter Park Pedestrian Crossing

Laptop scheme issue

#tamiluniversity_#tanjavur_#laptop

Laptop scheme issue

பொருள்: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், ஒருங்கினைந்த ஐந்தாண்டு பட்டப்படிப்பினருக்கு அரசின் 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ் விலையில்லா மடிக்கணினி வழங்குவதில் நிகழும் குழப்பங்கள் தொடர்பாக.


தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.ஒருங்கிணைந்த முதுகலை மூன்றாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள்.


வணக்கம் ஐயா! தமிழ்நாடு அரசு ஆனது 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 'உலகம் உங்கள் கையில்' என்ற திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மற்றும் அரசு சார் கல்லூரிகளிலும் இறுதி ஆண்டு மற்றும் இறுதி ஆண்டுக்கு முந்தைய ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுமென அறிவித்திருந்தது. இதன்படி தமிழ்நாடு அரசும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.


இதன் அடிப்படையில் தமிழ் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒருங்கிணைந்த முதுகலை மூன்றாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கவில்லை. மேலும், 19/02/2026 அன்று ஒருங்கிணைந்த முதுகலை ஐந்தாமாண்டு மாணவர்களுக்கு, அருகிலிருக்கும் வேறொரு கல்லூரியில் வைத்து மடிக்கணினி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களும் சேர்ந்து பதிவாளர் பொறுப்பு ஐயா பன்னீர்செல்வம் அவர்களிடமும் துணைவேந்தர் அம்மா பொறுப்பு பாரதி ஜோதி அம்மா அவர்களிடமும் மாணவர்கள் ஒரு மாத காலமாக கடிதங்களும், நேரில் சென்றும் மடிக்கணினி வழங்குவதனை பற்றி அனைத்து மாணவர்களும் ஒன்று திரண்டு கேட்டோம்.


இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் 20/02/2026 அன்று தமிழ் பல்கலைக்கழகம் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அந்த கடிதத்தினை தமிழக அரசிடம் மேல்முறையீடு செய்ய அனுப்பியிருந்தது. அதன் பிறகு இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. உலகம் உங்கள் கையில் எனும் திட்டம் முடிவதற்கு இன்னும் ஆறு நாட்களே உள்ளன. இதற்கிடையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த முதுகலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி 30/01/2026 அன்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஐயா அவர்களால் வழங்கப்பட்டது.


அதைத் தொடர்ந்து தற்போது இரண்டாமாண்டு மாணவர்களுக்கும் வழங்கப்போவதாக தெரிகிறது. இதனை கொண்டு தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களாகிய எங்களுக்கும் மடிக்கணினி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். எங்களின் கோரிக்கையை அரசிற்கு எடுத்துரைக்குமாறு மனுவைப் படிக்கும் நல்லுள்ளம் கொண்டவரிடம், அனைத்து மாணவர்களின் சார்பாகவும் பணிவன்புடனும் கேட்டுக் கொள்கின்றோம். நன்றி!



இப்படிக்கு,

ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலை பட்டப்படிப்பு இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள், தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

This Petition Has Ended.

To learn about the outcome of this petition and related updates, visit Telegram channel or Instagram Page.

0 Supporters

Discussion

Related News for This Petition


You can add any post links or media mentions here!


This petition is now live!

Share the link to build momentum and gain support.



Support these petitions as well: